தக்சினேஷ்வர் ஜோடி அபாரம்

போபால்: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தக்சினேஷ்வர், பரிக்சித் ஜோடி முன்னேறியது.

மத்திய பிரதேசத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையரில் சமீபத்தில் இந்துார் தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் தக்சினேஷ்வர் (தமிழகம்), பரிக்சித் ஜோடி, முதல் சுற்றில், இத்தொடரில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற ரஷ்யாவின் பாப்ரோவ், அகபோனோவ் ஜோடியை சந்தித்தது.

ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் தக்சினேஷ்வர், பரிக்சித் ஜோடி, 7-6, 7-6 என்ற நேர் செட்டில் போராடி வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் இந்தியாவின் விஷ்ணுவர்தன், சாய் பிரதீக் ஜோடி, சுரேஷ்குமார், சின்ஹா ஜோடி வெற்றி பெற்றன.

Advertisement