பும்ராவுக்கு விருது கிடைக்குமா

துபாய்: ஐ.சி.சி., டிசம்பர் மாத சிறந்த வீரர் விருது பட்டியலில் பும்ரா இடம் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத விருது பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31, சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர், டிசம்பர் மாதம் நடந்த 3 டெஸ்டில் 22 விக்கெட் சாய்த்தார். மொத்தம் 5 டெஸ்டில் 32 விக்கெட் வீழ்த்தினார். துரதிருஷ்டவசமாக, சிட்னி டெஸ்டில் முழுமையாக பங்கேற்க முடியவில்லை.
தவிர, இந்தியாவுக்கு எதிரான தொடரில், ஆஸ்திரேலியா கோப்பை வெல்ல கைகொடுத்த கேப்டன் கம்மின்ஸ் (3 டெஸ்ட், 17 விக்.,), இலங்கை, பாகிஸ்தான் டெஸ்டில் மிரட்டிய தென் ஆப்ரிக்காவின் பேட்டர்சன் (2 டெஸ்ட், 13 விக்.,) பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றனர்.

Advertisement