டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு

பல்லடம்; பல்லடம் அருகே, டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகரை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி நாகராணி, 43. தனியார் டெய்லர்.

நேற்று காலை, தனது கம்பெனியில் வேலை பார்க்கும் திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ராகவன், 46 என்பவருடன், டூவீலரில், கணபதிபாளையம்- ஓம்சக்தி நகர் நோக்கி சென்றார்.

பி.ஏ.பி., குடியிருப்பு அருகே, தொடர்ந்து வந்த டிப்பர் லாரி மீது டூவீலர் உரசி விபத்து ஏற்பட்டது. இதில், டூவீலருடன் இருவரும் கீழே விழ, நாகராணி, லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கிய நிலையில், உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் ராகவன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி நிற்காமல் சென்று விட்டது. விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement