ஊட்டியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ;ஊட்டியில் கவர்னரை கண்டித்து, தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'சட்டசபை கூட்ட தொடரில் தேசிய கீதம் பாட வேண்டும்,' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், நீலகிரி தி.மு.க., சார்பில், ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், மாநில கவர்னர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முபாரக் தலைமை வகித்தார். துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement