போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

காஞ்சிபுரம்:ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சி, ஒன்றியம் ஆகியவற்றை பிரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட, 21 வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற, மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது.

அதன்படி, காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, வந்தவாசி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கைது நடவடிக்கைக்கு ஏற்கனவே தயாராக இருந்த விஷ்ணுகாஞ்சி போலீசார், 100க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை கைது செய்தனர்.

Advertisement