பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு மண்டல அளவில் எறிபந்து போட்டி

விழுப்புரம்: விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் எறிபந்து விளையாட்டு போட்டிகள் மண்டல அளவில் நடைபெற்றது.

நாகை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே இந்த போட்டி நடந்தது. விளையாட்டு போட்டிகளை, நிர்வாக தலைவர் செல்வமணி, முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த போட்டியை, விளையாட்டு ஆசிரியர் தமிழ்செல்வன், பிரவின்ராஜ் ஆகியோர் நடத்தினர்.

இதில், நாகை தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தை தட்டி சென்றது. கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி 2வது இடத்தையும், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி 3வது இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement