மாநில சதுரங்க போட்டி துவக்க விழா

விழுப்புரம்: சக்ஷம் விழுப்புரம் மாவட்ட அமைப்பு சாரபில், பார்வையற்ற மற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டி துவக்க விழா நடைபெற்றது.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சக்ஷம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வி.ஆர்.பி., கல்விக்குழுமம் தாளாளர் சோழன், சக்ஷம் அமைப்பின் தென்பாரத செயலாளர் பிரதீப் குமார், ஆசிரியர் இளங்கோ முன்னிலை வகித்தனர். தேசிய துணை தலைவர் ஆஷா கோபாலகிருஷ்ணன், பிரெய்லி முறை மற்றும் மொழிகள் குறித்து, இந்த மொழி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி சார்ந்த எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கிறது குறித்தும், சக்ஷம் அமைப்பு வகிக்கும் முக்கியத்தும் பற்றி சிறப்புரையாற்றினார்.

பிரெயில் சதுரங்க சங்க செயலாளர் விக்னேஷ், போன் நேரு பள்ளி தாளாளர் வாசுதேவன், மூத்த வழக்கறிஞர் சங்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் பொன்சிவா, சக்ஷம் மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் பிரபாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாவட்ட இணை செயலாளர் பொற்செல்வி வரவேற்றார். இந்த போட்டியில், நுாற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Advertisement