கால்பந்து அணிக்கு உபகரணம் வழங்கல்
செஞ்சி: அரசு பள்ளி கால்பந்தாட்ட குழுவிற்கு விளையாட்டு உபகரணங்களை பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி வழங்கினார்.
சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கால்பந்தாட்ட குழு விழுப்புரம் மாவட்ட அளவில் வெற்றி பெற்றள்ளது.
இந்து குழு இன்று 9ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில அளவிளான கால்பந்து போட்டியில் பங்குபெற உள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, போட்டிக்கு தேவையான ஷூ, கையுறை, கவசம், கால்பந்து ஆகியவற்றை செஞ்சி பேரூராட்சி தலைவர் தமொக்தியார் அலி வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஜீவேந்திரன், உடற் கல்வி ஆசிரியர்கள் ஆனந்தராஜ் , பழனி ராஜ், ஆசிரியர் திலிப், கால்பந்து மாணவர் அணி தலைவர் விஷால் மற்றும் குழு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement