பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் புகார்; நகைக்கடை அதிபரிடம் விசாரணை
திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்த புகார் அடிப்படையில், நகைக்கடை உரிமையாளர் போபி செம்மனுாரிடம் கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
@1brதமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார் ஹனிரோஸ். செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, வயநாட்டில் உள்ள ரிசார்ட்டில் இருந்த, நகைக்கடை உரிமையாளர் போபி செம்மனுாரை வயநாடு போலீசார் கொச்சி அழைத்துச்சென்று விசாரிக்கின்றனர். கேரளாவில் மிகுந்த செல்வாக்கு கொண்ட நகைக்கடை உரிமையாளர் போபி செம்மனுார், நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போபி செம்மனுார் கூறியதாவது: 'பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி இப்போது ஏன் புகார் அளிக்க வேண்டும். நான் நடிகை ஹனிரோஸை மகாபாரதத்தின் குந்தி தேவியுடன் ஒப்பிட்டு பேசியது உண்மை தான்.
அப்போது அவர் புகார் ஏதும் அளிக்க வில்லை. நான் பேசியதில் தவறான நோக்கம் ஏதுமில்லை. ஒருவரை குந்தி தேவி என்று அழைப்பது தவறு ஆகாது. இவ்வாறு போபி செம்மனுார் கூறியுள்ளார்.
நடிகை ஹனிரோஸ் மலையாள யூடியூப் சேனல்கள் நடத்தி வரும் 20 பேர் மீதும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement