மாஸ்க் அணிவது கட்டாயம்; எச்.எம்.பி.வி., தொற்று பரவலை தடுக்க திருப்பதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

3

திருப்பதி: எச்.எம்.பி.வி., தொற்று பரவலை தடுக்க, திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எச்எம்பிவி தொற்று இந்தியா உள்ளிட்ட பக்கத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் முதலில் பெங்களூருவில் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து குஜராத்தின் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் 2 மாத ஆண் குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.


தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 45 வயது மதிக்கத்தக்க நபர், சேலத்தில் 69 வயது நபருக்கும் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்.எம்.பி.வி., தொற்று பரவலை தடுக்க, திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இது குறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியதாவது: எச்.எம்.பி.வி., தொற்று பரவலை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement