வேகமாக பரவுது காட்டுத்தீ; பைடனின் தவறான நிர்வாகத்தால் தண்ணீர் தட்டுப்பாடு; டிரம்ப் காட்டம்

1

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை, கட்டுப்படுத்த போதுமான தண்ணீர் இல்லை. இது, அதிபர் ஜோ பைடனின் தவறான நிர்வாகத்திற்கான உதாரணம்' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.



அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவியது. சக்திவாய்ந்த காற்று மற்றும் வறண்ட சூழ்நிலைகளால் தூண்டப்பட்ட காட்டுத் தீ, ஏற்கனவே சாண்டா மோனிகா மற்றும் மாலிபு இடையே 1,262 ஏக்கர் பகுதிகளை எரிந்துவிட்டது. இந்த காட்டுத்தீயால் மேலும் அழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.



இது குறித்து சமூகவலைதளத்தில், டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த போதுமான தண்ணீர் இல்லை. அரசிடம் பணம் இல்லை. இதைத்தான் ஜோ பைடன் என்னிடம் விட்டுச் செல்கிறார். இதற்கு அவருக்கு நன்றி. அதிபர் ஜோ பைடனின் தவறான நிர்வாகத்திற்கான உதாரணம்.

தெற்கு கலிபோர்னியாவிற்கு தண்ணீரை திருப்பி விடுவதற்கான திட்டத்தை கவர்னர் நியூசோம் நிராகரித்துள்ளார். உருகும் பனியிலிருந்து தண்ணீரை கலிபோர்னியாவின் பல பகுதிகளுக்கு தினமும் திருப்பி விட வேண்டும். இந்த பேரழிவை சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்களிடம் போதுமான பணம் இருக்குமா? ஜனவரி 20ம் தேதி போதுமான அளவு வேகமாக வரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement