திறமையான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்
புவனேஸ்வர்: இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு. 2047ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் 'பிரவாசி பாரதிய திவாஸ்' மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: உங்களால் என் தலை நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் சந்தித்த உலகத் தலைவர்கள் அந்நாட்டின் புலம் பெயர்ந்த இந்தியர்களை பாராட்டுகின்றனர். இந்தியர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள சமூகத்துடன் ஒத்துப்போகிறார்கள். எதிர்காலம் போரில் இல்லை என்பதை இந்தியா உலகிற்கு எடுத்து சொல்கிறது.
நாம் அந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் முழுமையான நேர்மையுடன் சேவை செய்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வானத்தின் உயரங்களை தொட முன்னேறி வருகிறது. உலகம் இந்தியா தனது கருத்தை வலுவாக முன் வைக்கிறது. 1947ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்தில் புலம்பெயர்ந்தோர் முக்கிய பங்கு வகித்தனர். நம் வாழ்வில் ஜனநாயகம் வேரூன்றியிருக்கிறது. தற்போது 2047ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜி20 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு ஆகும். இந்திய இளைஞர்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம், அவர்கள் திறமைகளுடன் செல்வதை உறுதி செய்ய அரசு முயற்சிக்கிறது. இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா துவங்கும். எங்கும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (7)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 ஜன,2025 - 19:15 Report Abuse
யாரை குறிப்பிடுகிறார் இவர். ராகுல் காந்தியையா, உதய நிதியையா...? ஒருவேளை அவர்களை மறைமுகமாக சாடுகிறாரோ...??
0
0
Reply
MARI KUMAR - TIRUNELVELI,இந்தியா
09 ஜன,2025 - 16:09 Report Abuse
இளைஞர்கள் பாதி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்
0
0
Reply
Mediagoons - ,இந்தியா
09 ஜன,2025 - 15:33 Report Abuse
ஏமாற்றுப்பேர்வழி மக்களை இளைஞ்சர்களை ஏமாற்றும் பேர்வழி
0
0
Reply
முருகன் - ,
09 ஜன,2025 - 15:16 Report Abuse
ஆனால் வேலை மட்டும் கிடைக்காது
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
09 ஜன,2025 - 15:15 Report Abuse
இங்கே ஊ ஊ பீ யீ ஸ் எழுதுற கருத்துக்களை படிக்காமே இந்த முடிவுக்கு வந்துட்டாரு .......
0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
09 ஜன,2025 - 14:53 Report Abuse
என்ன பயன் எதற்கும் உதவாத தலைமை கொண்ட இந்தியாவில் திறமையான இளைஞர்கள் எதிர்காலம் இல்லாமல் தடுமாறி கொண்டுள்ளார்கள்
0
0
veera - ,
09 ஜன,2025 - 17:10Report Abuse
அதனால் தமிழ்நாட்டில் பாதி பேர் டாஸ்மாக்கில் இருக்கிறார்கள் என்று நாராயண முத்து சொல்கிறார்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement