பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் 90 சதவீதம் வழங்கல்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் 90 சதவீதம் வழங்கப்பட்டது.
அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றை இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 39 ஆயிரத்து 688 ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர். திருவாடானை சிவில் சப்ளை அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன்கடை ஊழியர்கள் ஜன.3 முதல் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கினர். இதுவரை 90 சதவீதம் டோக்கன் வழங்கப்பட்டு விட்டது.
அந்த டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வேண்டும். நாள், நேரம் குறிப்பிட்டு இருக்கும். அந்த நாட்களில் சென்று வாங்கிக் கொள்ளலாம். இன்று முதல் பொங்கல் பரிசுப் பொருள் விநியோகம் துவங்கும் என்றனர்.