கீழக்கரை நகராட்சியுடன் மருதன்தோப்பு முனீஸ்வரம் இணைப்பதற்கு எதிர்ப்பு
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியுடன் தில்லையேந்தல் ஊராட்சியில் உள்ள சில கிராமங்களை இணைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி 7-வது வார்டிற்கு உட்பட்ட மருதன்தோப்பு மற்றும் முனீஸ்வரம் பகுதி கிராம மக்கள் கூறியதாவது:
எங்களை கிராமங்களை கீழக்கரை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும்.
மருதன்தோப்பு மற்றும் முனீஸ்வரம் பகுதியில் வறுமைக்கு கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் உள்ளனர். கீழக்கரை நகராட்சியுடன் இணைப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது.
மேலும் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்தும் உயரும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை, எளிய விவசாயம், பனை சார்ந்த கூலித்தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியை மட்டும் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் தரக்கூடாது.
திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர். இது குறித்து பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.