முதுகுளத்துார் அருகே ரோடு அமைக்கும் பணி மும்முரம்
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே எஸ்.பி.கோட்டை விலக்கு ரோட்டில் இருந்து கிடாத்திருக்கை முனியப்பசாமி கோயில் வரை புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி, கிடாத்திருக்கை, எஸ்.பி.கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் அருகே எஸ்.பி.கோட்டை விலக்கு ரோட்டில் இருந்து கிடாத்திருக்கை செல்லும் தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக நடப்பதற்கு லாயகற்றதாக இருந்தது. இதனால் இரவு நேரத்தில் கிராம மக்கள் பல கி.மீ., சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக எஸ்.பி.கோட்டை விலக்கு ரோட்டில் இருந்து
கொண்டுலாவி வழியாக கிடாத்திருக்கை முனியப்பசாமி கோயில் வரை 8 சிறு பாலங்களுடன் புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.