ஆர்.எஸ்.மங்கலம் பகுதிக்கு அறுவடை இயந்திரங்கள் வருகை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மகசூல் நிலையை அடைந்ததால் இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்ய உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதிக்கு நெல் அறுவடை இயந்திரங்களுடன் முகாமிட்டுள்ளனர்.

இந்த நெல் அறுவடை இயந்திரங்களை உள்ளூர் ஏஜன்டுகள் புக் செய்து கமிஷன் அடிப்படையில் அறுவடைக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர்.

எனவே இடைத்தரர்களின் கட்டுப்பாட்டில் அறுவடை இயந்திரங்கள் இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு அறுவடை கூலி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இயந்திரங்களின் அறுவடை கூலிக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Advertisement