பொங்கல் கோலப் போட்டி; பெண் வக்கீல்கள் அசத்தல்
திருப்பூர்; திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரங்கோலி கோலம் வரையும் போட்டி நடந்தது.
வரும், 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இன்று 10ம் தேதி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நீதித்துறை, பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கோர்ட் வளாகத்தில் ரங்கோலி கோலப் போட்டிகள் நடந்தது. பெண் வக்கீல்கள், ஊழியர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ரங்கோலி வரைந்தனர்.
இதில் சிறப்பான ரங்கோலி வரைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று நடைபெறும் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்படும். இன்று மதியம், 1:15 மணிக்கு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.