டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 12ம் வகுப்பு மாணவன் கைது

5


புதுடில்லி: தலைநகர் டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் அல்லது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதும், அதன்பிறகு, அது புரளி என தெரிய வருவதும் வாடிக்கையாகி விட்டது.


இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


பள்ளிகளில் தேர்வு நடத்துவதை தடுக்கவே, அவன் இதுபோன்ற இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரையில் 6 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பியிருப்பதும், குறைந்த பட்சம் ஒரே தடவையில் 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement