முற்றியது யார் அந்த சார் மோதல்; இவன் தான் அந்த சார் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்; சட்டசபை வளாகத்தில் பரபரப்பு

6

சென்னை: சென்னை, அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அ.தி.மு.க., நிர்வாகி சுதாகரின் புகைப்படத்துடன் சட்டசபைக்கு தி.மு.க., எம்.ஏ.எல்.,கள் வந்தனர்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், 'யார் அந்த சார்?' என்ற, 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும், 'யார் அந்த சார்?' என்பதை கேட்டு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன.



சட்டசபைக்கு, யார் அந்த சார்? என்ற பேட்ச் அணிந்து, சட்டசபைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். இந்நிலையில், இன்று (ஜன.,10) சென்னை, அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அ.தி.மு.க., நிர்வாகி சுதாகரின் புகைப்படத்துடன் சட்டசபைக்கு தி.மு.க., எம்.ஏ.எல்.,கள் வந்தனர். இவர் அந்த சார்? என்ற பதாகைகளுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement