எகிறும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,10) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த ஜன.,08ம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (ஜன.,09) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஜன.,10) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.
ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை தொட்டது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.