நடுரோட்டில் பழுதான ஆம்புலன்ஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்; திண்டுக்கல் அருகே அரசு மருத்துவமனை சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் திடீரென பழுதாகியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திண்டுக்கல் திருச்சி ரோடு வழியாக திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் அரசு மருத்துவமனையும் உள்ளதால் அடிக்கடி ஆம்புலன்ஸ்களும் வருகிறது.


இந்நிலையில் இன்று (ஜன.10) இரவு 9:10 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி ரோட்டிலிருந்து திருச்சி ரோடு அரசு மருத்துவமனை செல்ல காமராஜர் சிலை அருகே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது திடீரென ஆம்புலன்ஸில் பின்பக்க டயரில் ஜாயிண்ட் கட் ஆனது. இதனால் ஆம்புலன்ஸ் நகர முடியாமல் நடுரோட்டில் பழுதாகி அப்படியே நின்றது.


ஆம்புலன்ஸ் பழுதால், திருச்சி ரோடு மார்க்கமாக வந்த அரசு பஸ் உட்பட வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்படியே அணிவகுத்து நின்றன. இதனால் 15 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement