தமிழகத்திடம் வீழ்ந்தது பெங்கால்: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில்

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 2-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் தமிழகம், பெங்கால் அணிகள் மோதின. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் தமிழக அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 35வது நிமிடத்தில் பெங்கால் அணிக்கு கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் ருபிந்தர்பால் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 38வது நிமிடத்தில் தமிழக அணியின் உத்தம் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3வது வெற்றியை பதிவு செய்த தமிழக அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்கால் அணி (9 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Advertisement