பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு பெத்திக்குப்பம் மக்கள் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் அருகில் உள்ள பெத்திக்குப்பம் ஊராட்சியை இணைக்கும் அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நேற்று, பெத்திக்குப்பம் ஊராட்சி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜி.என்.டி., சாலையோரம், சாமிரெட்டிகண்டிகை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மக்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நுாறு நாள் வேலை, வரி உயர்வு, ஊராட்சிகளுக்கான சலுகை பறிப்பு போன்ற காரணங்களை முன் வைத்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் பெத்திக்குப்பம் ஊராட்சியை இணைக்கும் அரசாணையை திரும்ப பெற கோரி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement