அங்கன்வாடி மைய கூரை சேதம் அச்சத்தில் குழந்தைகள் பெற்றோர்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது களாம்பாக்கம் ஊராட்சி. இங்கு, அரசு துவக்கப் பள்ளி அருகே அங்கன்வாடி மையம் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அங்கன்வாடி மைய கட்டட சுவர்கள் விரிசல் அடைந்தும், கூரையின் ஒடுகளில் ஓட்டை விழுந்தும் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் இம்மையம் சீரமைக்காமல் உள்ளது.
இதனால் மழைக்காலத்தில் குழந்தைகள், உள்ளே அமர்ந்து பயில முடியாத நிலை ஏற்படுவதாக பெற்றோர் புலம்புகின்றனர். மேலும்ல பழைய கட்டடம் என்பதால்ல எப்போது இடிந்து விழுமோ எனல அச்சமடைந்துள்ளனர்.
எனவே, களாம்பாக்கம் அங்கன்வாடி மையத்தின் பழைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.