சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு; ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

8


சண்டிகர்: சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு புனே சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.


எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கடந்த 2023ம் ஆண்டு, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றிருந்த போது, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த டிச., மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதால், நேரில் ஆஜர் ஆவதில் விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விசாரணையை இன்றைய தினம்( ஜன.,10) ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராகுலுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவதில் இருந்து நிரந்தர விலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளது.

Advertisement