பொங்கலுக்கு நேற்று மட்டும் 3 லட்சம் பேர் பயணம்

சென்னை:பொங்கல் பண்டிகைக்கு, தமிழகம் முழுதும் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமான பஸ்களோடு, 1,445 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று மாலை முதல் மக்கள் சொந்த ஊருக்கு பயணமாகினர். இதனால், ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று மட்டும் அரசு பஸ்களில் 1.50 லட்சம்; ஆம்னி பஸ்களில் 50,000 பேர்; ரயில்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

கார்களிலும் ஏராளமானோர் சென்றனர். அடுத்து வரும் நாட்களில், வெளியூர் செல்லும் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement