ஈரோட்டில் தி.மு.க., போட்டி செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை:'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடும்' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவை தொடர்ந்து, அத்தொகுதியில் பிப்., 5ல் இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டதால், அக்கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., இம்முறை போட்டியிட விரும்பியது. இதையடுத்து, இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடும் என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஈரோடு கிழக்கில் தி.மு.க., போட்டியிட முடிவெடுக்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து, தி.மு.க., வேட்பாளரை, வெற்றி பெறச் செய்வோம்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement