பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவ-நீத வேணுகோபால சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதி-காலை, 4:45 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நவநீத வேணுகோபால சுவாமி சொர்க்க வாசல் வழியாக வந்தார். அப்-போது பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என கோஷம் எழுப்-பினர். இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவில், நரசிம்ம சுவாமி கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.* ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளியில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி, சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது. அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்-பட்டது. ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி சொர்க்க-வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ஓசூர், கோகுல் நகர் அருகே ரங்கோபண்டித அக்ரஹாரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்-பட்டது. சுவாமிக்கு வஸ்திர அலங்காரம், புஷ்ப அலங்காரம், சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சொர்க்க-வாசல் திறக்கப்பட்டு, உற்சவ மூர்த்தி அதன் வழியாக எழுந்தரு-ளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள, பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்-பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோபசந்திரம் தட்சின திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்-பட்டது.
தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் கோகுல்நகர் நந்தனம் பகு-தியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், அதிகாலையில் கொட்டும் பனியை கூட பொருட்ப-டுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

Advertisement