இழிவுபடுத்தி உள்ளார்!

டில்லியை, 10 ஆண்டுகள் கொள்ளையடித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது தோல்வி பயத்தில் உள்ளார். அதன் காரணமாக, பீஹார், உ.பி.,யைச் சேர்ந்த பல ஆயிரம் போலி வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறி, நம் சகோதர, சகோதரிகளை இழிவுபடுத்தியுள்ளார்.

நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,

காங்கிரசே பொறுப்பு!



'இண்டி கூட்டணி லோக்சபா தேர்தலுக்கானது; அது தற்போது இல்லை' என, கூட்டணி கட்சி தலைவர்கள் நினைக்கின்றனர். இந்நிலைக்கு காங்கிரசே காரணம். லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிட்டு அதிக இடங்களை பெற்றோம். அதன்பின் எந்த ஒரு செயல் திட்டமோ, விவாதமோ இல்லை.

சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா உத்தவ் அணி

ஜி.எஸ்.டி.,யில் குழப்பம்!



ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், அதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இது தொடர்பாக தினம் ஒரு சுற்றறிக்கை வெளியாகிறது. இந்த வரிகள், சாதாரண வர்த்தகர்கள் முதல் விவசாயிகள் வரை, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பவன் கெரா, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

Advertisement