வெவ்வேறு சம்பவத்தில் 2 தொழிலாளிகள் இறப்பு

ஈரோடு: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தரம்பவுரி, 40; இரண்டு மாதங்களுக்கு முன், ஈரோடு வந்தார். பெரியசேமூர், வேலா நகர் பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியில் இறந்தார். வீரப்பன்சத்-திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.* ஈரோடு, கருங்கல்பாளையம், சொக்காய்தோட்டத்தை சேர்ந்-தவர் வெங்கடாசலம், 49; திருமணமாகி மகள் உள்ளார். பெருந்-துறை சாலையில் ஒரு மார்பிள் கடையில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடிக்-கடி மயக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பெருந்துறை சாலையில் ஒரு கடை அருகில் நின்றவர் மயங்கி விழுந்ததில் இறந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement