வெள்ளகோவிலை தாலுகாவாக அறிவிக்க முன்மொழிவு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

காங்கேயம்: வெள்ளகோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க முன்மொழிவு தயாராகி வருகிறது. இதுகுறித்து மக்கள் தங்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த, 16 வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு அனுப்பி-யுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:காங்கேயம் தாலுாகாவில் உள்ள வெள்ளகோவில் உள்வட்-டத்தை இரண்டாக பிரித்தும், தாராபுரம் வட்டத்திலிருந்து கன்னி-வாடி உள்வட்ட, சங்கரண்டாம்பாளையம் உள்வட்டத்திலிருந்து மாம்பாடி, புங்கதுரை கிராமங்களை இணைத்தும், வெள்ள-கோவில் தாலுாக்கா உருவாக்கும் பொருட்டு, அதற்கான முன்-மொழிவு தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் வெள்ளகோவில் உள்ள வட்டம், முத்துார் உள் வட்டம் என பிரிக்கப்பட உள்ளது.
வெள்ளகோவில் வட்டத்தில் வெள்ளகோவில், சேனாபதிபா-ளையம், பச்சாபாளையம், உத்தமபாளையம, கம்பளியம்பட்டி, இலக்கமநாயக்கன்பட்டி ஆகிய ஆறு வருவாய் கிராமங்களும், முத்துார் உள் வட்டத்தில் முத்துார், சின்னமுத்தூர், உடையம், ராசாத்தாவலசு, வேலம்பாளையம், மங்கலப்பட்டி, பூமாண்டன்வ-லசு, மேட்டுப்பாளையம், வள்ளியரச்சல், வீரசோழபுரம் வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த தகவலை அந்தந்த கிராமங்களில் தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆட்சேபனை இருப்பின் தாராபுரம் சப்-கலெக்டர், காங்கேயம் தாசில்தாரிடம் நேரில் அல்லது தபாலில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்-வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement