காங்கேயம், தாராபுரத்தில் சொர்க்கவாசல் திறப்பு

காங்கேயம்: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, காங்கேயம் நகர் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோவிலில் நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்து, சொர்க்க-வாசல் வழியாக சென்றார்கள். இதை தொடர்ந்து சுவாமி வீதி-யுலா நடந்தது. இதேபோல பாப்பினி மடவிளாகம் ஆருத்ர கபா-லீஸ்வரர் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* தாராபுரம், அனுமந்தாபுரத்தில் கல்யாணராமர் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement