இன்சூரன்ஸ் பென்ஷனர் ஆர்ப்பாட்டம்
மதுரை : மதுரையில் அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் சங்கத்தினர் சார்பில் தர்ணா போரட்டம் எல்.ஐ.சி., கட்டடத்தில் நடந்தது.
மதுரை எல்.ஐ.சி., பென்ஷனர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏ.ஐ.ஐ.பி.ஏ., மதுரை துணைத் தலைவர் சந்திர சேகரன் கோரிக்கைகளை விளக்கினார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வின் போது பென்ஷன் தொகையும் உயர்த்த வேண்டும். பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
பென்ஷனர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியருக்கும் பாரபட்சமின்றி கருணைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். எல்.ஐ.சி., பென்ஷன் துணைத் தலைவர் கண்ணன், செயலாளர் சேகர், இணைச் செயலாளர் முரளிதரன், செயற்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், எல்.ஐ.சி., முதல் நிலை அதிகாரிகள் சங்க தலைவர் வைரமுத்து, தேசிய காப்பீட்டு களப் பணியாளர் கூட்டமைப்பின் செயலாளர் ராஜ் மோகன், காப்பீடு கழக ஊழியர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் மகாலிங்கம் பங்கேற்றனர்.