குடிநீர் கேட்டு போராட்டம்

இளையான்குடி பகைவரை வென்றான் கிராம மக்கள் காவிரி கூட்டு குடிநீர் திட்ட கேட் வால்வில் கசியும் நீரை பிடித்து உபயோகப்படுத்தி வந்தனர். இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் புதிதாக போடப்பட்டதை தொடர்ந்து பழைய குழாயில் உள்ள கேட் வால்வில் தண்ணீர் கசிவது நின்று விட்டதால் பகைவரை வென்றான் பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.

நேற்று பகைவரை வென்றான் கிராம மக்கள் காலி குடங்களுடன் இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement