கலைத்திருவிழாவில் வெற்றி பள்ளி மாணவிக்கு பாராட்டு 

திருப்பூர் : மாநில கலைத்திருவிழா வெற்றி பெற்ற மாணவிக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை, கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாநில கலைத்திருவிழா கடந்த, 4ம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்ற அனுப்பர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி லனிகாசென், தமிழ் - ஆத்திச்சூடி, மழலையர் பாடல் ஒப்புவித்தல் போட்டியில், மூன்றாமிடம் பெற்றார். மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் குழுவினர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement