மல்லிகை கிலோ ரூ.2000

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், மண்டபம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்றுகள்உற்பத்தி நடக்கிறது.

உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு மல்லிகை நாற்றுகள் இங்கிருந்து விற்பனைக்கு செல்கிறது.

மல்லிகைப் பூ பங்குனி, சித்திரை சீசன் காலத்தில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2000க்கு விற்கப்படுகிறது. தற்போது பனிப்பொழிவால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்தும் வரத்து இல்லாததால் மல்லிகை கிலோ ரூ.2000 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.

Advertisement