கோரிக்கை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம்
திருப்பூர் : நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புத் துணி முக்காடு போட்டு, ஒப்பாரி போராட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது.
'சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திய சென்னை ஜகோர்ட் உத்தரவை, அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளை பாதுகாக்க மாநில நெடுஞ்சாலைகளை அரசு நிர்வகிக்க வேண்டும்,' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புத்துணி முக்காடு போட்டு, ஒப்பாரி போராட்டம், திருப்பூர், காலேஜ் ரோடு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.
கோட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ராமன், மாநில செயலாளர் செந்தில்நாதன் கோரிக்கையை விளக்கி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement