ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவர் உறுதிமொழியேற்பு
திருப்பூர் : அவிநாசி, ரேவதி செவிலியர் கல்லுாரியின், 2024-2025ம் ஆண்டு, பி.எஸ்.சி., முதல் ஆண்டு, நர்சிங் மாணவியர் ஒளிவிளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் விழா, நர்சிங் கல்லுாரி அரங்கில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் டாக்டர் அகல்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, கொங்குநாடு செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜோஸ்பின் ஜாக்குலின்மேரி, செவிலியர் மேற்பார்வையாளர் சுகந்தி, கண்காணிப்பாளர் சரோஜினி, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கற்பகம், ரேவதி மருத்துவமனையின் செவிலியர் இயக்குனர் பங்கேற்றனர்.
ரேவதி கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, அறங்காவலர்கள் ரேவதி, டாக்டர்கள் விஷ்ணு ராகவ், ஹரி பிரணவ், ரேவதி செவிலியர் கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரேவதி கல்வி நிறுவனத்தின் அனைத்து முதல்வர்களும் பங்கேற்றனர். பின், சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து தீபம் பெற்று, மாணவியர் ஒளியேற்றினர். பின், உறுதிமொழியேற்றனர். ரேவதி செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் இளங்கோ நன்றி கூறினார்.