திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்க தடை

திருப்பூர், : வரும் 15ம் தேதி வள்ளுவர் தினம் முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நகர் நல அலுவலர் முருகானந்த் அறிக்கை: வரும் 15ம் தேதி வள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி ஆகியன வதை செய்வதும், அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதும் தடை செய்யப்படுகிறது. அன்றைய தினம், மாநகராட்சி பகுதியில் உள்ள இந்த இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மாநகராட்சி ஆடு வதைக் கூடமும் அன்று செயல்படாது. இதனை மீறுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement