வித்யாசாகர் பள்ளியில் பொங்கல் விழா

திருப்பூர், : திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு, வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி செயலாளர் சிவபிரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் சசிரேகா பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர் கோலமிட்டு, பொங்கல் வைத்தனர். மாணவர்கள் மாடு, கன்றை அலங்கரித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, துணை காவல் கண்காணிப்பாளர் (உளவுத்துறை, சென்னை) திருநாவுக்கரசு, பொங்கல் விழா குறித்தும், தமிழரின் சிறப்பையும் மாணவர்களிடையே விளக்கினார்.

மாணவ, மாணவியரிடையே பாரம்பரிய விளையாட்டு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், பவளக் கொடி கும்மியாட்டம் நடந்தது.

Advertisement