கோவை ,பொள்ளாசி வழியே சென்னை - மதுரைக்கு பொங்கல் சிறப்பு ரயில்  

திருப்பூர், : சென்னையில் இருந்து மதுரைக்கு பொங்கல் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கோவை, பொள்ளாச்சி, பழநி வழித்தடத்தில் இயங்கவுள்ளது.

வரும், 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில், சென்னை - மதுரை சிறப்பு ரயில் இன்று மாலை, 3:00 மணிக்கு புறப்படும். நாளை (12ம் தேதி) அதிகாலை, மதுரை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புறப்படும் ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை வந்து, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரை - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06068) வரும், 12ம் தேதி இரவு, 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:20 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயிலில் ஏ.சி., முன்பதிவு பெட்டி மட்டுமே இருக்கும். முன்பதிவில்லா பொது பெட்டி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement