எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்: தமிழக அரசு மீது விஜய் கடும் விமர்சனம்
சென்னை: ''எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (9)
R MANIVANNAN - chennai,இந்தியா
11 ஜன,2025 - 13:30 Report Abuse
அறிக்கை விட்டு விட்டார் . எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கள்
0
0
Reply
GMM - KA,இந்தியா
11 ஜன,2025 - 13:26 Report Abuse
விஜய், திமுக எதிர்ப்பதை ஆதரிக்க வேண்டும். நீட் ,மும்மொழி, புதிய கல்வி கொள்கை .. போன்றவற்றை ஆதரிக்க வேண்டும். திராவிட இயக்க குறைபாடுகள் பற்றி தினமும் அறிக்கை. தற்போது சீமான் புதிய பாதையில் செல்வது போல் செல்ல வேண்டும். அவரிடம் தமிழ் தேசியம், மொழி கொள்கை, மத அரசியல் குறைபாடுகள் உள்ளன. காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் அழிந்து விட்டது. ? பழைய, புதிய வாக்காளரிடம் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. எடப்பாடியின் திராவிட சார்பு தப்பு தாளத்தால், அண்ணா திமுக அழிநிலையில் உள்ளது. புதிய பார்வை மூலம் தான் மக்கள் ஆதரவு விஜய் பெற முடியும்.
0
0
Reply
kulandai kannan - ,
11 ஜன,2025 - 13:25 Report Abuse
திமுகவுக்கு பலமுனை தாக்குதல்.
0
0
Reply
R MANIVANNAN - chennai,இந்தியா
11 ஜன,2025 - 13:12 Report Abuse
உன்னை விடவா
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 ஜன,2025 - 12:36 Report Abuse
திராவிடம், முன்னேற்றம் என்று உருட்டுகிற அணைத்தும் அக்மார்க் ஏமாற்று வேலையே...
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 ஜன,2025 - 12:34 Report Abuse
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…
முதல்வர் ஸ்டாலின் பெருமானே…
உம்மை புரிந்துகொண்டால், உண்மை தெரிந்து கொண்டால்…
இந்த மக்கள் திருந்தலாமே... - இது எப்படி...?
0
0
Reply
முருகன் - ,
11 ஜன,2025 - 12:33 Report Abuse
உன்மை நிலையை களத்திற்கு வந்து தெரிந்து கொண்டு பேசினால் அறிக்கை நாயகனுக்கு நல்லது
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
11 ஜன,2025 - 12:26 Report Abuse
விஜய் அவர்களே ...... அறிக்கை விடுவதே அரசியலாகிவிடாது ..... ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்ப என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ????
0
0
Reply
சம்பா - ,
11 ஜன,2025 - 12:22 Report Abuse
நீ ஊட்ல இருந்துட்டு அறிக்க உட்ட வேலையாகாது
வீதிக்கு வா மறியல் பண்ணு
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement