சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 பேர் மீது புகார்; 5 பேர் கைது

10


பத்தினம்திட்டா: கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பலர் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.


பத்தினம்திட்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் 18 வயது இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட கவுன்சிலிங்கின் போது, தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். தனக்கு 13 வயது இருக்கும் போது, உறவினர் ஒருவர் ஆபாச படத்தை செல்போனில் காட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அதன்பிறகு, அவரது நண்பர்கள் சிலரும் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பகீர் தகவலை கூறினார்.


அவர் கொடுத்த இந்தத் தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திடம், 5 ஆண்டுகளில் 60 பேர் சிறுமியை பாலில் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மகளிர் காவல் சப் இன்ஸ்பெக்டர் இரு எப்.ஐ.ஆர்.,களை பதிவு செய்தனர். மேலும், அந்த மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் 6வது குற்றவாளி, ஏற்கனவே மற்றொரு போக்சோ வழக்கில் சிறையில் உள்ளான்.


கேரளாவை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பத்தினம்திட்டாவின் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் வினோத் கிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement