உ.பி.,யில் ரயில் நிலைய கட்டுமான கூரை இடிந்து விபத்து

2

கன்னோஜ்: உ.பி.யில் கன்னோஜ் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.


கன்னோஜ் ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு மாடி கட்டிடத்தில் பணிகள் நடைபெற்று வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விபத்து நடந்தபோது சுமார் 35 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்.


இது குறித்து மீட்பு குழு அதிகாரிகள் கூறியதாவது:

மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஒரு குழு உட்பட மீட்புப் பணியாளர்கள்,ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரயில்வே போலீஸ் சம்பவ இடத்தில் உள்ளனர், சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரை 23 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


விபத்து குறித்து அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாநில அரசு, விபத்தில சிக்கி பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Advertisement