மலேசிய பாட்மின்டன்: சாத்விக்-சிராக் ஏமாற்றம்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி தோல்வியடைந்தது.
கோலாலம்பூரில், மலேசிய ஓபன் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் கிம் வோன் ஹோ, சியோ சியுங் ஜே ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 10-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 15-21 எனக் கோட்டைவிட்டது.


மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சாத்விக், சிராக் ஜோடி 10-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement