காலிறுதியில் ஷிவா தபா: தேசிய குத்துச்சண்டையில்
பரேலி: தேசிய குத்துச்சண்டை காலிறுதிக்கு ஷிவா தபா, சச்சின் சிவாச் முன்னேறினர்.
உ.பி.,யின் பரேலியில், தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 8வது சீசன் நடக்கிறது. இதன் 60-65 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் அசாமின் ஷிவா தபா, சண்டிகரின் ஹிமான்ஷு சங்வான் மோதினர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2015) வெண்கலம் வென்ற ஷிவா தபா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
அடுத்து நடந்த 55-60 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் சர்வீசஸ் அணியின் சச்சின் சிவாச், மணிப்பூரின் கிங்சன் மோதினர். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் (2015, வெள்ளி), உலக யூத் சாம்பியன்ஷிப் (2016, தங்கம்), காமன்வெல்த் யூத் விளையாட்டில் (2017, தங்கம்) பதக்கம் வென்ற சச்சின் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பின், 63.5 கிலோ பிரிவு போட்டியில் ஹிமாச்சல பிரதேசத்தின் அபினாஷ் ஜம்வால் 5-0 என, முன்னாள் யூத் உலக சாம்பியன் வன்ஷாஜ் குமாரை (சர்வீசஸ்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.