மாநில அறிவியல் கண்காட்சிக்கு 5 பேர் தகுதி



மாநில அறிவியல் கண்காட்சிக்கு 5 பேர் தகுதி


ஈரோடு,:ஈரோடு மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் அரசு, அரசு நிதியுதவி, சுய நிதி, மெட்ரிக் நடுநிலை,உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளில் எட்டு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சி, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் நடந்தது. தனிப்பட்ட வகை, குழு வகை, ஆசிரியர் வகைக்கு என தனித்தனியே போட்டி நடந்தது.
தனிப்பட்ட வகையில் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர் சபரி முதலிடம், அவல் பூந்துறை அரசு மேல்நிலை பள்ளி கவிஸ்வரா இரண்டாமிடம், குழு வகையில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி ரிஷிக் ஆர்யா, முகில் முதலிடம், பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் உதயவண்ணன், ஹர்ஷித் இரண்டாமிடம் பிடித்தனர். ஆசிரியர் வகையில் பெருந்துறை வாய்ப்பாடி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் வெங்கடேஸ்வரன் முதலிடம் பிடித்தார். இவர்கள் அனைவரும் இன்று, நாளை திருச்சியில் நடக்கும் மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

Advertisement