'போகியில் பழையதை எரிப்பதை தவிருங்கள்'

அரவக்குறிச்சி: நம் முன்னோர், பொங்கல் திருநாளுக்கு முன், இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர்.

இச்செய்கையால் காற்று மாசுப-டாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்தது. தற்-போது, போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணி, ரப்பர் பொருட் கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசா-யனம் கலந்த பொருட் கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதை வலியுறுத்தி, அரவக்குறிச்சிக்கு உட்-பட்ட, 15 வார்டுகளிலும் பேரூராட்சி வாகனம் கொண்டு, ஒலி-பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.இந்தாண்டும், பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்ற-வற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், போகி பண்டிகையை கொண்டாட, அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement