எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கரூர்: கரூர், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுா-ரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு, கல்லுாரி வளாகத்தில் வாழை மரங்கள், தென்னங்கீற்று, பனை ஓலை மற்றும் பல வண்ணப்பூக்கள் அலங்-காரம் செய்யப்பட்டு இருந்தது. மாணவ, -மாணவியர் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். கயிறு இழுக்கும் போட்டி, உறி-யடி, ஓவியம், கட்டுரை மற்றும் கோலம் வரைதல் போன்ற பல்-வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின், மாணவ, மாணவியர் துறை வாரியாக சிறு, சிறு குழுக்களாக இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.விழாவில் கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலாளர் சரண்குமார், செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement