அரசு கல்லுாரிகளில் பொங்கல் விழா

குளித்தலை: குளித்தலை, தரகம்பட்டி அரசு கலைக் கல்லுாரிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.


குளித்தலை, அரசு கலைக் கல்லுாரியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் அன்பரசு (பொ) தலைமையில் மாணவ, மாணவியர் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் துறை தலைவர் ஜெகதீசன், ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டா தேன்மொழி, கணிதத் துறை தலைவர் உமாதேவி உள்பட பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், தரகம்பட்டியில் உள்ள அரசு கலை கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Advertisement